எமது நோக்கு

வினைத்திறன் மிக்க அரச ஊழியர்களினூடாக பொது மக்களுக்கு நிலையான அபிவிருத்தியை உருவாக்குவது எங்களளுடைய இலக்காகும்.

எமது கொள்கை

அரச கொள்கைகளுக்கேற்ப சேவை வழங்குதல், வளத்தொடர்பரடல் மற்றும் மக்கள் பங்குபற்றல் , வினை்த்திறன் மிக்க நிலையான அபிவிருத்திக்கான திட்டமிடல் மூலம் பிரதேச வாசிகளின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துதல் எங்களுடைய பணியாகும்.

மஹவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவு அனுராதபுரம் மாவட்டத்தில் அனுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதியியில் அமைந்துள்ளது. அது வடக்கே வவுனியா மாவட்டத்தையும்  தெற்​கே நொச்சியகம பிரதேச செயலாளர் பிரிவையும், கிழக்கே  மத்திய நுவரகம் பலாத்த பிரதேச செயலாளர் பிரிவையும் , மேற்கே மன்னார் மாவட்டத்தையும்  எல்லைகளாகக் கொண்டு 634.88 சதுர கிலோமீட்டர்கள் விசாலமான பரப்பளவைக்  கொண்டது.

குளங்களால் பினணக்கப்பட்ட இராச்சியம் என புகழ்பெற்ற ரஜரட்ட பிரதேசத்தின் 22 பிரதேச  செயலாளர் பிரிவுகளில் மஹவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவு, 30 வருட யுத்தகாலத்தில் கசப்பான அனுபவங்களைப் பெற்ற, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இன்றும் இருபதற்கான காரணம் அனுராதபுர நகரத்தின் தொலைவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளதாலும், பிரதேச செயலாளர் பிரிவிவை கடந்து இன்னுமொரு பிரதான நகருக்குச் செல்லும் நுழைவுப்பாதை இன்மையுமாகும்.

பிரதேச செயலாளர்  பிரிவின் ஒரு பகுதி  வில்பத்து தேசிய விலங்குகள் சரணாலயத்தையும்  உள்ளடக்கியுள்ளது. இந்த புவியியல் பிரதேசம் ஏரிகள் ஐந்தைக் கொண்ட பொறி (வில் அங்சிய - ஏரிகள் ஐந்தைக் கொண்ட பிரதேசம்) என்ற கருத்து தற்பொழுது ( சிங்கள மொழியில் ) விலச்சிய என மொழிப் பரிமாணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது..

நிறுவனத்தின் பரிணாமம்

மஹவிலச்சிய பிரதேச  உதவி அரசாங்க அதிபர் பிரிவு 14.01.1988 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் இருந்தன. பிரதேசத்தின் ஆரம்ப   உதவி அரசாங்க அதிபர்  திரு. பீ. எம்.  சுனில் திலகரத்ன  அவர்கள் ஆவார். பிரதான லிகிதர் உட்பட 04 லிகிதர்களும் ஒரு சிற்றூழியரும் கடமையாற்றினர்.. 1992 ஆம் ஆண்டு பிரதேச செயலகங்கள் ஆரம்பிக்கப்ட்டதையடுத்து   மஹவிலச்சிய உதவி அரசாங்க அதிபர் காரியாலயம்  நுவரகம் பளாத்த மத்திய  பிரதேச செயலகத்தின் உப அலுவலகமாக  இருந்தது.

மஹவிலச்சிய  உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் 1998 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதியிலிருந்து பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது. தற்பொழுது செயலகப்பிரிவில் 17 கிராம சேவகர் பிரிவுகளும், 137 கிராமங்களும் உள்ளதோடு . 34 கைவிடப்பட்ட கிராமங்களும் உள்ளன. இந்த பிரிவில் 136 சிறு நீர்ப்பாசன குளங்களும் மற்றும் 01 பெரிய நீர்ப்பாசன குளமும்  உள்ளன. மகவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவிற்கு தனியான பிரதேச சபை இல்லை. இது மத்திய நுவரகம் பளாத்த பிரதேச சபையின் கீழ் செயற்படுகிறது. இவ்வாறு பல்வேறு  மாற்றங்களுடன் இற்றைவரை   மகாவிலச்சிய பிரதேச செயலகம் நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருகிறது.


News & Events

26
ஏப்2019
Sinhala and Tamil New Year Celebration - 2019

Sinhala and Tamil New Year Celebration - 2019

Sinhala and Tamil New Year Celebration -...

11
ஏப்2019
'April Pledge' for a Drugs-Free Country

'April Pledge' for a Drugs-Free Country

'April Pledge' for a Drugs-Free Country A...

குடியுரிமை சாசனம்

Scroll To Top