எமது நோக்கு

வினைத்திறன் மிக்க அரச ஊழியர்களினூடாக பொது மக்களுக்கு நிலையான அபிவிருத்தியை உருவாக்குவது எங்களளுடைய இலக்காகும்.

எமது கொள்கை

அரச கொள்கைகளுக்கேற்ப சேவை வழங்குதல், வளத்தொடர்பரடல் மற்றும் மக்கள் பங்குபற்றல் , வினை்த்திறன் மிக்க நிலையான அபிவிருத்திக்கான திட்டமிடல் மூலம் பிரதேச வாசிகளின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துதல் எங்களுடைய பணியாகும்.

மஹவிலச்சிய பிரதேச செயலகம் அநுராதபுர மாவட்டத்தின் அநுராதபுர மேற்கு தேர்தல் தொகுதியில் அமையப்பெற்றுள்ளது. இது வடக்கில் வவுனியா மாவட்டத்தையும், தெற்கில் நொச்சியாகம பிரதேச செயலகத்தையும், கிழக்கில் மத்திய நுவரகம் பிராந்திய பிரதேச செயலகத்தையும், மேற்கில் மன்னார் மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்ட 634.88 சதுர கிலோமீட்டர் விசாலத்தையுடைய நிலப்பரப்பை உடையது.

நீர்த்தேக்கம் அதிகம் நிறைந்த பிரதேசம் என புகழ்பெற்ற ரஜரட்ட பிரதேசத்தில் பிரதேச செயலகங்கள் 22 இல் மஹவிலச்சிய பிரதேச செயலகப’ பிரிவு முப்பது வருட யுத்த காலத்தின் போது துக்கரமான அனுபவங்கள் அதிகம் மிக்கதும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச செயலகப் பிரிவாக இன்றும் இப் பிரதேச செயகப் பிரிவு இருப்பதற்கு காரணம் அநுராதபுர நகரத்திலிருந்து தூரமாக அநுராதபுர மேற்கில் அமையப்பெற்றுள்ள இப்பிரதேச செயலகத்தை கடந்து செல்லக்கூடியவாறு இன்னுமொறு பிரதான நகரத்தை அடையக்கூடிய வீதி இல்லாமையினாலாகும்.

பிரதேசத்துக்குரிய நிலப்பரப்பில் ஒரு பகுதி வில்பத்து தேசிய பூங்காவை உள்ளடக்கியதுடன். அந்த நிலப்பரப்பில் ஐந்து நீர்த்தேக்கம் உள்ளடக்கியதால் நீர்த்தேக்கம் ஐந்து (ஐந்து குளம் உள்ள பிரதேசம்) என்ற கருத்து தற்காலத்தில் விலச்சிய என மொழி மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.

நிறுவன விபரங்கள்
மஹவிச்சிய பிரதேச செயலகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது 1988.01.14 ஆம் திகதியாகும். இது 06 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டது. முதலாவது பிரதேச உப அரசாங்க அதிபர் திரு பீ.எம்.சுணில் திலகரத்ன அவராவார். அப்போது பணியாளர் குழாத்தின் பிரதான எழுதுவினைஞர் அடங்கலாக 04 நபர்கள், ஒரு அலுவலக உதவியாளரையும் உள்ளடக்கியிருந்தது. 1992 ஆம் வருடத்தில் பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்டதுடன் மஹவிலச்சிய உப அரசாங்க அதிபர் அலுவலகம் மத்திய நுவரகம் பிராந்திய பிரதேச செயலகத்தின் உப அலுவலகமாக இருந்தது.

மஹவிலச்சிய பிரதேச உப அரசாங்க அதிபர் அலுவலகம் 1998.05.13 ஆம் திகதி தொடக்கம் பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது பிரதேசத்தில் 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் 137 கிராமங்களையும் உள்ளடக்கியதாக இப் பிரதேச செயலகம் காணப்படுவதுடன் அதில் 34 கிராமங்கள் கைவிடப்பட்ட கிராமங்களாகும். பிரதேசத்தின் சிறு நீர்பாசனம் 136 உம்​,01 பாரிய நீர்ப்பாசனமும் காணப்படுகிறது. மஹவிலச்சிய பிரதேச செயலகத்திற்கு வேறான பிரதேச சபை ஒன்று இல்லை என்பதுடன் அது மத்திய நுவரகம் பிராந்திய பிரதேச சபை அதிகார எல்லைக்குள் செயற்படுகிறது. இவ்வாறு பல்வேறு வேறுபாடுகளுக்கு உள்ளாகி இன்று வரை மஹவிலச்சிய பிரதேச செயலகம் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

எமது மரபுரிமைகள்

தந்திரிமலை

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மூன்றாவது தர்ம பண்பாட்டின் பெறுபேராக பெளத்த மத வழிகாட்டலில் ஆசி பெற்ற நாம் புனித மிக்க ஜயசிறி மகாபோதியின் ஆசிபெறுவற்கு கருணைபெற்றவர்களாக உள்ளோம். அன்று புனித மிக்க அரச மரத்தினை ஏற்ற இரண்டாம் பெதிஸ் அரசன் உட்பட அனைவரும் தங்கிய இடம் அன்று நிவக்க பமுணு என்ற கிராமம் இன்று தந்திரிமலை என உலக பிரசித்திபெற்ற இடமாக விளங்குகிறது. வரலாற்று பெறுமதி மிக்க தந்திரிமலை பிற்பட்ட காலங்களில் இலங்கையை ஆட்சி செய்த துட்டகைமுணு அரசன் மற்றும் புதல்வன் சாலிய குமரன் அசோக மாலா தம்பதியினர் போசித்து பாதுகாத்த  புனித மிக்க பிரதேசமாகும்.

மஹவிலச்சிய குளம்

வரலாற்று மரபுரிமையான மஹவிலச்சிய குளம் பிரதேசத்துக்கு மட்டுமன்றி மக்களது வாழ்வுக்கும் மிகப் பெரிய நிவாரணத்தை வழங்குகிறது.அநுராதபுர நகரத்துக்கு கிட்டத்தட்ட 18 மைல் மேற்கில் வருடத்தின் அதிகமான காலம் வெப்பத்தினால் பாதிக்கப்படும் விலச்சிக்கும் அங்கு வாழும் மக்களின் உள்ளத்துக்கு குளிர்ச்சியை அளிக்க கூடியதும் மஹவிலச்சிய குளமாகும். விலச்சிய வாழ் மக்களின் சகல செயற்பாடுகளுக்கும் மறைமுகமான விதத்தில் குளம் தொடர்புபடுகிறன்ற என்பதை நினைப்பது சரியான விடயமாகும் எனலாம். கி.வ 140 க்கு நீண்டதான பண்டைய வரலாற்றுக்கு உரித்தாகும் மஹவிலச்சிய குளம் பழைய நீர்ப்பாசனத்தின் முன்னோடியான வசப மன்னனின் மற்றுமொறு கைவடிவமாகும். தற்போது 31500 ஏக்கர் அடி நீர்கொள்ளவுடைய இந்த பாரிய குளத்தின் வரலாற்றில் சாலிய அசோகமாலாவும் ஏதேனும் ஒரு விதத்தில் பங்காற்றியிருப்பார் என்று சான்றோர் நினைக்கின்றனர். அங்கு அவர்கள் அந்த மக்களின் நம்பிக்கை, தற்போது வில்பத்துவில் செயலிழந்துள்ள சிறிய விலச்சிய குளத்தையும் தொடர்புபடுத்துவது அபூர்வமான விடயமாகும்.

1988 வருடம் தொடக்கம் சேவையாற்றிய பிரதேச செயலாளர்கள்

 பெயர் தொடக்கம்  வரை 
திரு பீ.எம்.சுனில் திலகரத்ன 1988 1990 
திரு பீ.கே.பிரியன்த குமார 1990 1993 
திரு ரத்நாயக்க 1993 1997 
திரு ஏ.எம்.டப்ள்யு.ஏ. அமுணுகம 1997 1999 
திருமதி  அசோகா அலவத்த 1999 2000 
திரு ஜீ.விஜித நன்த குமார் 2000 2006 
திரு ஆர்.எம்.பீ.ரத்நாயக்க 2006.03.08 2007.08.26 
திரு ஜே.டப்ள்யு.எஸ்.கித்சிறி 2007.08.27 2011.01.05
திரு என்.எம்.என்.ஆர்.பீ.நவரத்ன 2011.01.06 2012.07.18
திரு ஜே.எம்.எஸ்.பி.பீ.ஜயதிலக 2012.07.30 2013.06.18
திரு ஈ.ஆர்.திலகரத்ன 2013.06.19 2019.05.27
திரு என்.எச்.ஆர்.நிசான்த 2019.05.30 2019.10.17
திருமதி மங்ஜரீ சீ. சந்திரதாச 2019.10.17 to date

News & Events

12
செப்2023
පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය  2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය 2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය -2023....

22
மே2023
2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය...

குடியுரிமை சாசனம்

Scroll To Top