2019 புது வருட கடமைகளை ஆரம்பித்தல்

மஹவிலச்சிய பிரதேச செயலகத்தின் 2019 புது வருட உத்தியோகபூர்வ கடமை ஆரம்பிக்கும் நிகழ்வு மத அனுஷ்டானங்களுடன் மற்றும் தேசிய கொடியை ஏற்றியதன் பிற்பாடு 2019.01.01 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்து.தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் இரானுவ வீரர்கள் உட்பட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் சலக உத்தியோகத்தர்களும் அரசாங்க சேவை உறுதிமொழிவை செய்தனர்.
அதன் பிற்பாடு இலங்கையில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்குடைய வேலைத்திட்டத்திற்கு சகல உத்தியோகத்தர்களின் பங்களிப்பை நேர்மையாக, கால தாமதமின்றி மற்றும் மிக்க தியாகத்துடன் செயலாற்ற வேண்டும் என்ற தலைப்பில் பிரதேச செயலாளரினால் சிறிய உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.
தேசத்தை கட்டியெழுப்பிய பரம்பரையினரின் நடன அரங்கேற்றம் - 2018

வட மத்திய மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாகாண பிரதேச செயலாளர் பிரிவுகள் 29 இன் முதியோர் சங்கத்தை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட 2018.11.27 ஆம் திகதி அநுராதபும் இளைஞர் மன்ற கலைரங்கத்தில் நடாத்தப்பட்ட தேசத்தை கட்டியெழுப்பிய பரம்பரையினரின் நடன அரங்கேற்றம் – 2018 நடனப் போட்டியில் மஹவிலச்சிய பிரதேச முதியோர் சங்கம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
மஹவிலச்சிய பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் கையளிக்கப்பட்டது

மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவின் சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் மஹவிலச்சிய பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் சிறுநீரக நோய் நிவாரணம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அநுராதபுர மாவட்ட இணைப்பாளர் முன்னால் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்கள் மற்றும் மஹவிலச்சிய பிரதேச இணைப்புக் குழுவின் இணைத் தலைவர் முன்னால் அமைச்சர் டப்ள்யு.பீ.ஏக்கநாயக்க அவர்களின் கரங்களால் 2018.10.23 ஆம் திகதி மக்கள் கையளிக்கப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதியின் கருத்திட்ட பிரகாரம் இலங்கையினுல் நீண்ட காலமாக காணப்படும் சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணி மற்றும் இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவால் செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அமைக்கும் இந்த மகத்தான சமூக நலச்செயற்பாடு 2015 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
மஹவிலச்சிய பிரதேச தலைமை மதகுரு கௌரவ பேமடுவே சுமங்கல தேரர் அவர்கள், மஹவிலச்சிய பிரதேச செயலாளர் திரு ஈ.ஆர்.திலகரத்ன அவர்கள், கடற்படையின் லுதினன் ஹேரத், மஹவிலச்சிய பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.















